
பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே கடந்த டிசம்பர் மாதம் சிங் அந்த பெண்ணுடன் குண்டகலில் யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவருடைய தந்தையின் வீட்டிலேயே விட்டுவிட்டு திருமணம் செய்ததை ரகசியமாக வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த ரகசியம் கடந்த 2 வாரங்களுக்கு முன் தெரிய வந்த நிலையில் குடும்பத்தினர் சிங்கின் மீது விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் பேச தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய மனைவி மற்றும் மாமியார் இவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டனர். அதன்படி அவருக்கு உணவில் தூக்க மருந்து கலந்து மயக்கம் அடைய செய்தனர். அதன் பின் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவருடைய மனைவி அவரை சிக்கணபவரா என்ற பகுதிக்கு அழைத்து சென்றார். அவர்களின் பின்னால் மாமியார் ஆட்டோவில் அந்த இடத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் வாகனத்தின் உள்ளே வைத்து கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சிங் ன் சகோதரர் கொலை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து லோக்நாத் சிங்கை கொலை செய்த குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியார் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.