சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் (Jiangsu, China) சேர்ந்த ஒரு ஆசியத் தம்பதிக்கு, வெள்ளை நிறத்துடனும், தங்க நிற முடியுடனும், அடர் நீலக் கண்களுடனும் கூடிய ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆசியப் பெற்றோர்களுக்கு ஐரோப்பியத் தோற்றத்தில் குழந்தை பிறந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் முதல் பெற்றோர் வரை அனைவரும் குழப்பமடைந்தனர்.

குழந்தையின் தோற்றம் குறித்துச் சந்தேகமடைந்த பெற்றோர், மருத்துவமனையில் குழந்தையை மாற்றி விட்டார்களோ என்று பயந்து, உடனடியாக DNA தந்தைவழிச் சோதனையை (Paternity Test) மேற்கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by vpv (@vpvmedia)

சோதனையில், குழந்தை அவர்களது உயிரியல் ரீதியானக் குழந்தை (Biological child) தான் என உறுதியானது. பின்னர், குடும்ப வரலாறு குறித்து ஆய்வு செய்தபோது, அந்தக் குழந்தையின் முப்பாட்டனார் (Great Grandfather) ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதுத் தெரிய வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பிறகு, அந்த மறைந்திருந்த ஐரோப்பிய மரபணு (Hidden European Gene) இப்போதுச் செயல்திறன் அடைந்துள்ளது. இதுபோல, முன்னோர்களின் அடங்கிப் போன குணங்கள், பின்னர் வெளிப்படும் நிகழ்வைச் ‘சீம்போக்கு’ (Atavism) என்று விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.