ரஷ்யாவைச் சேர்ந்த 36 வயதுச் சமூக ஊடகப் பதிவாளர் ஒருவர், ‘பெற்றோர் ரீதியானச் சோதனை’ (Parenting Experiment) என்ற பெயரில், தனது 4 முதல் 6 வயதுடையச் சிறுவனைக் கட்டுக் கோப்பை (Vacuum Seal) கொண்ட பிளாஸ்டிக் பைக்குள் வைத்துப் பம்பைப் பயன்படுத்தி காற்றை வெளியேற்றிய வீடியோச் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

47 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பிளாஸ்டிக் பை சிறுவனின் உடலைச் சுற்றி இறுக்கமானதும், அந்தச் சிறுவன் ‘அம்மா!’ என்று கத்தி, பதட்டத்துடனும் பயத்துடனும் கஷ்டப்படுவதுத் தெளிவாகத் தெரிந்தது.

இது உள்ளடக்கத்திற்காகச் செய்யப்படும் குழந்தைத் துஷ்பிரயோகம் (Child Abuse) என்று உலகம் முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குழந்தை நல ஆர்வலர்கள், இதுபோலச் செய்வதுச் சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் குறைபாடு, மூச்சுத்திணறல் மற்றும் நீண்ட கால உளவியல் அதிர்ச்சி போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். சரடோவ் (Saratov) குழந்தை நலப் பாதுகாப்புச் சேவைகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.