விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆயில் மில் காலனியில் ஞானதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோசப்(17) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்த ஜோசப் சம்பவம் நடைபெற்ற அன்று செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜோசப்பின் தாய் சில்வியா என்னிடம் இப்போது பணம் இல்லை. பணம் வந்தவுடன் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசப் தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோசப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.