சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் இருக்கும் கடைக்கு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மினி பேருந்து சிறுவன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.