SBI கிரேடிட் கார்டுகளின் கட்டணங்களை பாரத் ஸ்டேட் வங்கியின் கார்டு மற்றும் கட்டணசேவை பிரிவு திருத்தி உள்ளது. வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதியிலிருந்து திருத்தப்பட்ட SBI கார்டின் கட்டணங்கள் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக SBI கார்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சலில்,”உங்களது எஸ்பிஐ கிரேடிட்கார்டு மீதான கட்டணங்கள் வருகிற மார்ச் 17ம் தேதியிலிருந்து மாறுகிறது. அதன்படி, SBI செயலாக்கக் கட்டணம் ரூ.99 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளில் வசூலிக்கப்பட்டு வந்தது. இது வருகிற மார்ச் 17 முதல் ரூ.199 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளாக கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்.