தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது மக்களுக்காக சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புத்தம் புது ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். இந்த புது ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவலை பிஎன்பி வங்கி டுவிட் வாயிலாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தன்  அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில், பழைய (அ) சிதைந்த நோட்டுகளை மாற்ற விரும்பினால், தற்போது நீங்கள் இந்த வேலையை ஈஸியாக செய்யலாம்.

உங்கள் அருகில் உள்ள கிளையை தொடர்பு கொள்ளவும். இங்கே நீங்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, வங்கியின் எந்த கிளைக்கும் சென்று பழைய (அ) சிதைந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். இதனிடையே வங்கி ஊழியர் யாராவது உங்களது நோட்டை மாற்ற மறுத்தால், அது பற்றி நீங்கள் புகாரளிக்கலாம். ரூபாய் நோட்டின் நிலை மோசமாக இருப்பின், அதன் மதிப்பு குறையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும் என கூறியுள்ளது.

அதோடு எந்தவொரு கிழிந்த ரூபாய் நோட்டின் ஒருபகுதி காணாமல் போனால் (அ) இரண்டுக்கும் அதிகமான துண்டுகளை கொண்டு நோட்டு ஒட்டப்பட்டு இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் முக்கிய சின்னங்களாக விளங்கும் அதிகாரத்தின் பெயர், உத்தரவாதம், உறுதி மொழி விதி, கையொப்பம், அசோக தூண், மகாத்மா காந்தியின் படம், வாட்டர் மார்க் ஆகியவை காணாமல் போனால் நீங்கள் கொடுக்கும் நோட்டுகள் மாற்றப்படாது. நீண்டகாலமாக சந்தையில் புழக்கத்திலிருந்த பழைய நோட்டுக்களையும் நீங்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.