ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயம் இன்றி நலமுடன் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோதாவரி ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் பீபி நகர், புவனகிரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.