கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக SBI வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன் என பல வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு SBI மீண்டும் அதிர்ச்சி அளித்துள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணம் இதுவரை ரூ.99 (வரியும் சேர்த்து) இருந்த நிலையில், மார்ச் 17 முதல் ரூ.199 ஆக (வரியும் சேர்த்து) அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐயில் இருந்து செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.