இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி அதன் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டியும், 46 முதல் 179 நாட்களுக்கு 4.5% வட்டி, 180 முதல் 210 நாட்களுக்கு 5.25% வட்டி, 211 முதல் 365 நாட்களுக்குள் 5.75% வட்டி , 1 முதல் 2 வருடத்திற்குள் 6.8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதம் வட்டியும், 2 முதல் 3 வருடத்திற்குள் ஏழு சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.