நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி பல சலுகைகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் sbi வங்கி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்டுகளில் 0.5% அதிக வட்டி வழங்குகிறது.

அதோடு சேர்த்து wecareஎன்ற சிறப்பு திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஒரு சதவீதம் அதிக வட்டி வழங்குகிறது. அதாவது மற்றவர்களுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் Wecare திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான கடைசி நாள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.