நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய SBI, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் எனும் சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்து உள்ளது. முன்பாக இத்திட்டத்தை ஏப்ரல் 2023 மீண்டும் தொடங்கிய பின், இதில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. SBI-ன் இந்த திட்டத்தை உங்களால் இன்னும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை எனில், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி இதில் முதலீடு செய்வதன் வாயிலாக நல்ல வருமானம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

இத்திட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தற்போது முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு காலமானது 400 நாட்கள் ஆகும். வங்கியின் 400 நாள் “அம்ரித் கலாஷ்” சிறப்பு FD திட்டத்தின் கீழ் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டியும், மூத்தக்குடிமக்களுக்கு 7.6% வட்டியும் வழங்கப்படுகிறது.