விரைவில் சிமென்ட் விலையானது 10-12 ரூபாய் வரை குறையலாம் என்று சொல்லப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் தேவை வலுவாக இருந்தாலும், போட்டி அதிகரித்து இருப்பதால் சிமென்ட் நிறுவனங்கள் விலையை ஒன்று முதல் 3 சதவீதம் (ரூ.10 முதல் 12 வரை) குறைக்கலாம்.

வீடு கட்டுமானம் செய்வோருக்கு நம்பிக்கை அளிக்கும் இச்செய்தி, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிமென்ட் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை குறைவதால் சிமென்ட் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.