இந்தியாவிலும் அவ்வப்போது பல்வேறு புதிய ரயில்கள் தொடங்கப்படுகிறது. இது போன்ற சூழலில் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதோடு ரயில் பயணத்தின்போது ஒருசில செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ரயிலில் பயணம் செய்யும்போது உங்களது உடமைகளை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.

உங்களது பொருட்களை ரயிலில் அங்குமிங்குமாக வைக்கவேண்டாம். அதோடு பொருட்களை உங்கள் இருக்கைக்கு அடியில் ஒரு இடத்தில் வைக்க வேண்டும். பிறர் பொருட்கள் உடன் உங்கள் பொருட்களை கலக்காதீர்கள். தேவை இன்றி ரயிலின் சங்கிலியை இழுக்கக்கூடாது. அப்படி தேவையில்லாமல் ரயில் சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றம். மொபைலை சார்ஜிங்கில் வைக்கும்போதும் ரயிலின் ஜன்னல் (அ) கதவுக்கு அருகே மொபைலை பயன்படுத்தும் போதும் மிகவும் கண்காணிப்புடன் இருப்பது அவசியம்.