வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டும் முழுவதும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் குறித்து அதியமான் எழுதிய நூல் மொழிபெயர்ந்து வெளியிடப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையடுத்து அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை. ஒரு இடத்தில் கூட மூடப்படவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். அதற்கு அம்மா உணவகத்தில் உணவு தரமாக இல்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். அப்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் “உணவு தரமாக இல்லை என்று ஏதேனும் ஒரு இடத்தை குறிப்பிட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.