குஜராத் மாநிலம், வடோதராவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த ஒரு கமாண்டோ திடீரெனச் சரிந்து மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை, நவம்பர் 29 அன்று, சர்தார் ஒற்றுமை நடைப்பயணம் நகருக்குள் நுழைந்தபோது, அட்லதாரா பகுதியில் ஜே.பி. நட்டா கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
BJP President @JPNadda was delivering a speech at a programme in Gujarat.
One of the security personnel in his team fell unconscious, yet an insensitive JP Nadda did not even bother to check on him or help get him to a hospital.
He continued his speech. What a shame!
This is… pic.twitter.com/XaM8ulj9WA
— Saral Patel (@SaralPatel) November 29, 2025
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ‘ராஷ்ட்ரிய ஏக்தா யாத்ரா’வில் ஜே.பி. நட்டா உரையாற்றிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல்களின்படி, நீண்ட நேரம் நின்றிருந்ததாலோ அல்லது உடல் அசௌகரியத்தாலோ அந்தக் கமாண்டோ திடீரென மயங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்த மற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு உதவ விரைந்து, அவரைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோதிலும், ஜே.பி. நட்டா தனது உரையைத் தொடர்ந்துள்ளார். இந்த ஒற்றுமைப் பேரணியில் மாநிலத் தலைவர் ஜகதீஷ் விஸ்வகர்மா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உட்படப் பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
