ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின் போது ஒரே பாலின திருமணத்திற்கு நீதிமன்ற சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது என்றும்,  அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த மே 13ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கூடிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட சாசனம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.