அனைத்து மக்களுமே சிலிண்டரை பயன்படுத் தும் விதமாக  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. மேலும் சிலிண்டர் நிறுவனங்களும் புதிய இணைப்பை பெறுவதற்கு வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைப்பை ஒரே ஒரு மிஸ்டு கால் மூலமாக  பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக முன்பு சிலிண்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு சில தினங்கள் கழித்து சிலிண்டர் புத்தகமும் ரெகுலேட்டமும் வழங்கப்படும்.

தற்போது இந்த முறையானது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 8454955555 என்ற நம்பருக்கு டயல் செய்து மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். மிஸ்டுகால் கொடுத்தவுடன் செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேவையான விபரங்களை கொடுக்க வேண்டும். அதன் பிறகு கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்டு இன்டேன் சிலிண்டரை கொடுப்பார்கள். மிஸ்டுகால் மூலம் புதிய  இணைப்பை பெறும் வசதியானது நாடு முழுவதும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.