நடிகர் சல்மான் கான் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. சென்ற 2014 ஆம் வருடம் தமிழில் நடிகர் அஜித்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான படம் வீரம். இந்த படத்தை இப்போது சல்மான்கான் ஹிந்தியில் “கிஸி கி பாய் கிஸி கி ஜான்” எனும் பெயரில் ரீமேக் செய்து நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற முஹரம் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ராம்சரண், சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த பாடலை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..