ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு டெல்லி-ல் இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த கோகோ என்னும் இளம் பெண் சமீபத்தில் இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் கோ கோ இன் இந்தியா என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி வருவதுடன் அதில், நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் அவர் செய்யக்கூடிய நிகழ்வுகளை பதிவிட்டும்  வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல்,  டெல்லி சரோஜினி நகர் பகுதியில் எப்போதும் போல் தான் செய்யக்கூடிய நிகழ்வுகளை Vlog ஆக யூடியூபில் பதிவிட வீடியோ எடுக்கும் போது அங்கே வந்த அந்நிய நபர் ஒருவர் இவரை கண்டதும் நாம் இருவரும் நண்பர்களாக பழகலாம் என அனுகியுள்ளார்.

ஆனால் அவருக்கு அது பிடிக்காத காரணத்தினால்,  அதை நிராகரித்துள்ளார்.  இருப்பினும் விடாது தொடர்ந்து தொந்தரவு செய்யவே ஆணித்தரமாக NO என்று சொல்லியுள்ளார்.இதை  தொடர்ந்து தகாத வார்த்தைகளால் அவர் பேசத் தொடங்க, அசௌகரியத்தை  உணர்ந்த அப்பெண் முகத்தை சுருக்கியபடி தனது வெறுப்பை வெளிப்படுத்தி, Bye,Bye,GoodBye  என கூறி விலகி சென்றுள்ளார்.

தற்போது இச்சம்பவம் குறித்த வீடியோ அவரது youtube வலைதளத்தில் வெளியாகி வைரலாக,  இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் பலர் அந்த இளைஞர் செய்த தவறுக்கு ஒரு இந்தியராக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் இதுபோன்ற கேவலமான நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என தங்களது கருத்துக்களை அந்த வீடியோவிற்கு கீழ் பதிவு செய்து வருகின்றனர். 

https://youtube.com/shorts/EcYbgYflIgk?si=3OmqPo8DIbckXsoX