பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகுப்பில் அரிசி, வெல்லம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த பொருட்கள் அனைத்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன.

ஆகவே தமிழக விவசாயிகள் பயன்பெறும்புகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்றைய நீதிபதிகள் கிருஷ்ணகுமார்,  விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக் வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொங்கலுக்கு தற்போது குறுகிய காலம் இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கையில் முன்னெடுப்பது கடினம்.

அதோடு மினிமம் பேலன்ஸ் என கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் பலன் கார்டுதாரர்களை முழுமையாக சென்றடையாமல் போக வாய்ப்புள்ளது. அதோடு ரேஷன் கார்டுகளை பொருத்தவரை மூன்று வகையான காடுகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதிலும் சிக்கல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அந்த அதற்கு நீதிபதிகள்,  மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்கும் பணியை போல இந்த பணியையும் செய்யலாமே என்ற கேள்வி எழுப்பி உள்ளது. பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா ? என்பது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை  ஜனவரி 4ஆம் தேதி ஒத்திவைத்திருக்கிறார்கள்.