செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, ஓபிஎஸ் ஒரு அரசியல் நடத்துகிறார். தர்மயுத்தம் நடத்துகிறார். தர்மயுத்தத்தில் சசிகலா ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்பது அவருடைய கருத்து. அதனால் தர்மயுத்தம் நடத்தி,  ஒரு விசாரணை கமிஷன் போடுகிறார்கள். ஐந்தாண்டுகள் நடக்கிறது. கடைசியில் விசாரணை கமிஷன் போய் சசிகலா எந்த தப்பும் செய்யவில்லை.  செய்யமாட்டார். அவர் எப்படி ஜெயலலிதாவுக்கு எதிராக இருப்பார் என்று சொல்லி முடித்துக் கொண்டு விட்டார். பிறகு எதற்கு கமிஷன் ? எதற்கு தர்மயுத்தம் ? இந்த அரசியலில் தமிழ்நாடு ஐந்தாண்டு சிக்கிக் கொண்டு தவித்தது.

நான் கேட்கிறேன் வலியில்லாத வழியில் இவர்களுடைய அறிவுக்கு ஏற்ற நிலையில் இந்த அரசியலை கொண்டு செலுத்துகிறார்கள். அதன் மீதே மக்களுடைய பார்வை, சிந்தனை எல்லாமே போகிறது. ஆகவே தமிழ்நாட்டு அரசியலில்  உரிய சிக்கல்களை தீர்ப்பதற்குரிய வழிமுறைகள் இவர்களிடம் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து. இன்னமும் சொல்கிறேன்…

இந்த நீட் பெரிதாக பேசுகிறார் முதலமைச்சர்…  நான் திரும்பத் திரும்ப கேட்கிறேன். ஆயிரம் கோடி ரூபாய் சந்தையை  இழந்துவிட்டோம் என்பதுதான் நீங்கள் தவிர்ப்பதற்கு காரணம். +2 என்பது மருத்துவக் கல்லூரிக்கான தேர்வு முறையாக இருந்தால் ஆயிரம் கோடி ரூபாய் வரவு- செலவு நடந்தது. இப்போது அது நடக்கவில்லை. ஆனால் எங்களுடைய கட்சியின் கருத்து….  எல்லா உரிமைகளும் மாநிலங்களுக்கு தான் இருக்க வேண்டும். சில உரிமைகளை தவிர என்று  நாங்கள் கருதுகிறவர்கள்.

கல்வி, மருத்துவம் இரண்டும் மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  நீ அவை மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என்று கருதுவதற்கும்,  நாங்கள் கருதுவதற்கும் வேறுபாடு உண்டு. நீ எதற்காக கருதுகிறாய் என்றால் ? மீண்டும் சந்தை நம் கையில் வரவேண்டும் என்பதற்காக கருதுகிறாய். இந்த நீட்டை பற்றி நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே…  எங்களுடைய கூட்டணி ஆட்சி அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ? நீட்டை எடுத்து விடுவோம் என்று பேசுகிறேர்களே நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன்.