செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், G -20 மாநாட்டுக்கு  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்களுக்கு அழைப்பு சென்றதாக தெரியவில்லை. ஆனால் கேபினட் அந்தஸ்துள்ள காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கவில்லை.  முதல்வர் என்கிற முறையில்ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. மம்தா பனர்ஜி அவர்களும் முதல்வர் என்ற முறையில் அந்த விருந்தில் கலந்து கொண்டார். தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்களுக்கு அழைப்பு சென்றதாக தெரியவில்லை. ஆனால் கேபினட் அந்தஸ்துள்ள காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அவர்களுக்கோ, மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்க வேண்டும், அனுப்பவில்லை.  உள்நோக்கத்துடன் தவித்து இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ஆனால் முதல்வர் என்ற முறையிலே மம்தா பானர்ஜி  அவர்களும், நம்முடைய தமிழக முதல்வர்  ஸ்டாலின் அவர்களும் பங்கேற்றார்கள்.

இது எந்த வகையிலும் கூட்டணி அரசின் கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்டதல்ல அல்லது அது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. சமரசம் என்று கருதுவது அவர்களின் பார்வை பிழை அல்லது திட்டமிட்டு குழப்புவதற்கான ஒரு முயற்சி. தமிழ்நாடு முதல்வர் அவர்களும், மேற்கு வங்க முதல்வர் அவர்களும் பங்கேற்றது குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வமான அழைப்பு என்கிற  அடிப்படையில் முதல்வராக போய் பங்கேற்றார்கள். மற்றபடி எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

ஆளுநர் ஒரு பத்தாம் பசலி நபர் என்பது இதிலிருந்து தெரிகிறது.  நீண்ட நெடுங்காலமாக இருந்த மண்ணில் நிலைத்திருக்கக்கூடிய  பழமை வாதத்தை… மூடநம்பிக்கையை…  சமூகம் அப்படியே பின்பற்ற வேண்டும்.  இழி தொழில்களை, குலத்தொழில்களை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற 100 விழுக்காடு வடிகட்டிய சனாதனி தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி என தெரிவித்தார்.