மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும். அதற்கு ஆளும் கட்சியான திமுக ஒத்துப் போவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்த டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, தமிழ்நாடு மாநில அரசின் ஒப்புதல் இன்றி மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது. அதற்கு எதிராக வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மத்திய அரசு தமிழ்நாட்டு அரசின் அனுமதி இன்றி ஏல உரிமைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என கூறினார்.