‘பெஞ்சல்’ புயலால் சேதம் அடைந்துள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது உத்தேசமாக எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி 1,29,000 ஹெக்டேட் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னர் நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.