பதவி விலகல் கடிதம் என்பது எந்தத் துறையிலும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக தனியார் துறைகளில் பணியாளர்கள் வேலையிலிருந்து விலகும்போது, தங்களின் விருப்பத்தை முறையாகக் குறிப்பிட்டு, பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும்.

இந்நிலையில்  ஒரு ஊழியர் எழுதிய பதவி விலகல் கடிதம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர், “வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் நான் விலகுகிறேன். ஆனால், அங்கு எனக்கு வேலை சரிப்படவில்லை என்றால், திரும்பி வருவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் கலாய்ப்பதோடு, சிலர் பாராட்டவும் தொடங்கியுள்ளனர். “நிர்வாகம் இந்த கடிதத்தை எப்படி பார்க்கும்?” அல்லது “திரும்பி வந்தால் அவருக்கு முன்னேற்றம் கிடைக்குமா?” போன்ற கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டுள்ளன.