உலகிலேயே மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா மோதிரம் அணிந்தபடி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் காதலித்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 15 வயதான மகனும் கால்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது தாய் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனை அடுத்து வாடகை தாய் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு ரொனால்டோ மீண்டும் தந்தையானார்.
அதன் பின்னர் ஜார்ஜினா மூலம் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் இவர்களுக்கு பிறந்து அதில் ஒன்று உயிர் இழந்தது. இந்நிலையில் தற்போது மிகவும் விலை உயர்ந்த மோதிரத்தை அணிவித்து தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார் ரொனால்டோ.
அதன் விலை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது. அதாவது ஜார்ஜினா அணிந்திருந்த மோதிரம் ஒரு வைர மோதிரம் ஆகும் அது கிட்டத்தட்ட 15 முதல் 30 கேரட் வரை இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி மோதிரத்தின் விலை சுமார் 2 மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பின்படி 17 கோடி முதல் 43 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
