திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில் ரிலீஸ் பார்த்தபடியும் ஓட்டியுள்ளார்.

இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த போக்குவரத்து துறை, அவரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.