இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் வேடிக்கையான வீடியோக்கள் உருவாக்க, மற்றவர்கள் அட்டூழியங்களிலும் ஈடுபடுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். தற்போது மெட்ரோ ரயில்களில் கூட இப்படியான ” பிரபலத்துக்காக” வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதையே சுட்டிக்காட்டும் வகையில், ஒரு இளைஞர் மெட்ரோ ரயிலில் நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by funnylalaram73 (@funnylalaram73)

உதித் நாராயணின் பழைய காதல் பாடலுக்கு ரயிலில் பயணிக்கின்ற அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, ஒரு இளைஞர் மட்டும் தன் உலகத்தில் முழுமையாக தொலைந்துவிட்டு, பாய்ந்து பாய்ந்து ஆட ஆரம்பிக்கிறார். அவரது நடன அசைவுகள் பார்ப்பவர்களை சிரிப்பால் உலுக்க, மெட்ரோவில் இருந்த மற்ற பயணிகளும் அவரைப் பார்த்து சிரித்துவிட்டனர். ஆனால் அந்த இளைஞருக்கு சற்று கூடத் தயக்கம் இல்லாமல், தான் மழையில் நனைவது போல நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோவை @funnylalaram73 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், 17,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. “இதுக்கு மெட்ரோ டிக்கெட் யாரு வாங்கி கொடுத்தது?”, “சாவியை யாரு செலுத்துனா?”, “இவன் ஆடறான்… நானே கூச்சப்பட்டுட்டேன்!” போன்ற நையாண்டி கருத்துகளும் குவிந்துள்ளன. வைரலாகியுள்ள இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.