அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ADMK ஆட்சியில் MGR விலையில்லா வேஷ்டி – சேலை கொடுத்தாரு. முதியோர்களுக்கு பென்ஷன் 100 ரூபாய் முதன் முதலில் தொடங்கினாரு. ஏழைப் பிள்ளைகள் படிப்பதற்கு சத்துணவு திட்டம் தந்தார். மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் தந்தாரு. சீருடை கொடுத்து செருப்பு கொடுத்தாரு.  கேலி பேசினாங்க…  சத்துணவு திட்டத்திற்கு கலைஞர் சொன்னார்  பிச்சைக்காரர்களை ஆக்கிவிட்டார் மாணவர்களை.

பாட ம் படிக்க வேண்டிய நேரத்தில் தட்டை தூக்க வைத்து விட்டார். எம்ஜிஆர் படிக்கிற பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்து விட்டார் என்று சொன்னார். ஆனால் புரட்சித்தலைவர் சொன்னார். என் ஆருயிர் நண்பர் கலைஞர் அவர்களுக்கு இந்த திட்டத்தினுடைய அருமை தெரியல. இப்போ மாணவர்களினுடைய எண்ணிக்கை கூடிவிட்டது.  படிப்பவர்களின் எண்னிக்கை கூடி விட்டது.  இந்த திட்டத்தை  நான் நிறைவேற்ற முடியாதுன்னு சொன்னார் கலைஞர்.

என் மனைவியும்,  நானும் தெருவில் இறங்கி பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன்  என்று சொன்னார்.இன்று வரைக்கும் சாகா வரம் பெற்ற அந்த திட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சத்துணவு திட்டம். மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. மத்திய அரசே தொகுப்பு கொடுக்குது.

மத்திய அரசில் இருந்து அரிசி  கொடுக்கிறார்கள். இது அல்லவா  சட்டம்.  மக்களுக்கான சட்டம். ஏழை குடிசைகள் வீடுகளில் அப்போ மின்சாரம் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச மின்சாரம் கொடுத்தவர் எம்ஜிஆர். ஓலை குடிசையில் இருக்கக் கூடாது என ஓட்டு வீடு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இது இந்த சாதாரண இயக்கம் கிடையாது.  அண்ணா திமுக சாதாரண இயக்கம் கிடையாது. ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்து, ஏழைகள் படுகின்ற கஷ்டத்தை அதில் தன்னை இணைத்துக் கொண்ட கட்சி என பேசினார்.