விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,  மகாராஷ்டிரா 6, மேற்குவங்கம் 7…  300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள். இந்த தொகுதிகளில் அவர்களை வீழ்த்தினாலே போதும் ஆட்சி கட்டலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி விட முடியும்.

அப்போ நாம இங்க டைட்டா ஒர்க் பண்ணி ஆகணும். ஒரு தொகுதியை கூட நாம் இழந்து விடக்கூடாது. இந்த பொறுப்பு யாருக்கு இருக்கிறதோ,  இல்லையோ…  புரட்சியாளர் அம்பேத்கரின் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய தேவை காங்கிரஸையோ, திமுகவையோ, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்பதை விட,  புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்தாக வேண்டும்.

இன்றைக்கு நாம் என்ன பேசுகிறோமோ,  அந்த குரல் அப்படியே ராகுல் காந்தியின் குரலாக ஒலிக்கிறது. இன்றைக்கு அவர் பேச்சை நீங்கள் உற்று கவனியுங்கள் அவரும் சேவ்  கான்ஸ்டிடியூஷன் அப்படின்னு சொல்லுறாரு. மோடி 500 ரூபாய் நோட்டு,  1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னவுடன்…  அடுத்த அரை மணி நேரத்தில் நான்  பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தேன்.

இந்தியாவிலேயே எந்த  தலைவனும் அரை மணி நேரத்தில் அதற்கு கருத்து சொல்லவில்லை.  விடுதலை சிறுத்தைகள் சொன்னோம். நரேந்திர மோடி எடுத்தேன்,  கவிழ்த்தேன் என்று தான்தோன்றித்தனமாக எதேச்சி அதிகாரமாக செயல்படுகிறார். இவருடைய போக்கை பார்த்தால் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்ற முதல் குரல் சிறுத்தைகளின் குரல் என தெரிவித்தார்.