தொடர் டெபாசிட்டுகளுக்கு 7  வங்கிகளானது 7 சதவீதத்துக்கும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியதை அடுத்து, பல்வேறு வங்கிகள் ஐந்தாண்டு காலக்கெடுவுடன் RD-களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 7.6சதவீதம் வரையிலும் வட்டி வழங்கக்கூடிய வங்கிகளின் பட்டியல் இது. DCB வங்கி முதலீட்டாளர்களுக்கு 60 மாத RD-களில் 7.2% வருமானத்தை வழங்குகிறது.

சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வழக்கமான முதலீட்டாளர்கள் 5-10 வருடங்கள் வரை முதிர்ச்சியடையும் RD-களில் 7.25% வருமானத்தை பெறலாம். மூத்தக்குடிமக்கள் 7.5% சம்பாதிப்பர். உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பொது முதலீட்டாளர்களுக்கு 36 -60 மாதங்கள் வரையிலான ஆர்டிகளில் 7.2% வட்டியை வழங்குகிறது. 63-120 மாதங்களில் முதிர்ச்சியடைக்கூடிய RD-களில் ஒருவர் 6.5% வருமானத்தை பெறலாம்.

Deutsche Bankன் முதலீட்டாளர்கள் 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் RD-களில் 7.25% வருமானத்தைப் பெறலாம். இண்டுஸ்லாண்ட் வங்கி பொது முதலீட்டாளர்களுக்கு 61 மற்றும் அதற்கு அதிகமான மாதங்களுக்கான RD-க்களுக்கு 7 சதவீத வருமானத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களுக்கு, 7.5% வட்டி வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கியின் வழக்கமான முதலீட்டாளர்கள் 5 ஆண்டு RD-களில் 7% வருமானத்தை பெறலாம். மூத்தக்குடிமக்கள் ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள ஆர்டிக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டி பெறுவர். முன்னணி தனியார் கடன் வழங்குநரான HDFC வங்கியானது, பொது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு RDகளில் 7% வருமானத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களுக்கு 7.5% வட்டி கிடைக்கும்.