தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில், தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராஷ்மிகா வெளியிடுவார். அந்த வகையில் ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை தற்போது ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வைரல் ஆகி வருகிறது.