ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட்டு வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்நிலையில் மும்பையில் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று ஷூட்டிங் இல்லாத காரணத்தினால் வான்கடே ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து வருகிறார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.