தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார். இந்த படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. இத்திரைப்படம் சென்ற தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் டிசம்பர் மாதம் பாபா திரைப்படம்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாபா திரைப்படத்தை ரஜினி திடீரென ரிலீஸ் செய்ய காரணம் இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.

அது என்னவென்றால் ரஜினிக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கை இருக்கின்றது. ஜோதிடர் ஒருவர் ரஜினியின் அடுத்த திரைப்படம் தோல்வியாக இருக்கும் என தெரிவித்து இருக்கின்றார். இதனால் ஏற்கனவே தோல்வி படமாக அமைந்த பாபா திரைப்படத்தை ரஜினி ரீ-ரிலீஸ் செய்திருக்கின்றார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.