ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அங்கு காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.தேர்தல் ஆணையம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத்தில்,

பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, பாரத் ஆதிவாசி கட்சி 3  இடங்களிலும்,  பகுஜன் சமாஜ்வாதி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்கல் 1 இடத்திலும், ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி – 1 இடத்திலும்,  சுயேச்சை 8 இடத்திலும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.