வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புயல் மற்றும் கனமழை சூறாவளியை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அவசர உதவிக்கு மாநில அவசர கால மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மின்துறை 1912, சுகாதாரத்துறை 108, 104, காவல்துறை 100, 112, 1931, 1073, 1901, தீயணைப்புத்துறை 101, கடலோர காவல் படை 1554 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளாத வரை முகாம்களை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும்