மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை நாட்களில் புடவைகளை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறும் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை இலவச சேலை வழங்கப்படும் என்றும் ஒரு செயலை ரூபாய் 355 என்ற விலையில் மாநில அரசின் விசைத்தறி கலகம் மூலமாக தயாரிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.