வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பரப்புரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தவெக தலைமை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, QR கோடு வசதியுடன் கூடிய டிஜிட்டல் பாஸ் வைத்திருக்கும் 4,900 நிர்வாகிகள் மட்டுமே குறிப்பிட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த பரப்புரை நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என கட்சித் தலைமை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன, அதேசமயம் தளபதியின் வருகையை முன்னிட்டு அகரம்சேரி பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
