உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பலூன்கள் பிரதிபலிப்பான்கள் மற்றும் உளவு கருவிகளை சுமந்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவை தலைநகரின் மீது எப்போது பரந்தன என்று குறிப்பிடவில்லை.

இருப்பினும் புதன்கிழமை வானில் எச்சரிக்கை வழங்கப்பட்டன. தகவலின் படி காற்றின் உந்துதலின் கீழ் காற்றில் நகரும் பலூன்கள் என்று ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உக்ரனின் வான் பாதுகாப்பை கண்டறிந்து தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த பலூன்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார் உக்கிரன் விமானப்படையின் செய்தி தொடர்பாளர். இந்த பலூன்கள் உக்ரைன் வான் பாதுகாப்பை திசை திருப்ப ரஷ்யா பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.