ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பெரும் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. தொடர்ந்து போர் மற்றும் போர் பதற்றமும் அங்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ரஷ்யா போரை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவில் இதற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவு செய்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ரஷ்யாவை சேர்ந்த மாணவி ஒருவர் போருக்கு எதிரான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிசியா என்ற அந்த மாணவி பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வருகின்றார். அவரது நண்பர் ரஷ்ய போருக்கு எதிராக விமர்சித்ததை இணையத்தில் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு எலக்ட்ரானிக் டாக்குலின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றார் என்றும் சொல்லப்படுகிறது. ஆயுதப்படைகளை இணைப்பு படுத்தியதாகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும் அந்த பெண்ணின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அச்சிறுமியின் கையில் புதினை சிலந்தி போல் சித்தரித்து கையில் பச்சை குத்தி இருக்கிறார். ரஷ்யாவை கிருமியாவுடன் இணைக்கும் பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து அவரது நண்பர் வருத்தப்பட்டதை குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலத்தை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாக அவரே ஒப்புக்கொண்டும் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டு காவலில் இருப்பதால் தொலைபேசி இணையதளம் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.