பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியான MS MARVEL தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் அட்டகாசமாக நடித்திருந்தார் இமான் வெல்லனி. அவர் ஏற்றிருந்த கமாலா கான் கதாபாத்திரத்தை அவரை விட யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது. அந்தத் தொடரின் கடைசி எபிசோடில் ப்ரீ லார்சன் கேமியா ரோலில் நடித்திருந்தார். அன்றே அடுத்து வரவிருக்கும் எபிசோடுக்கான சிறிய டீசரையும் வெளியிட்டு இருந்தார்கள்.

தற்போது அதே இடத்தில் இருந்தே தி மார்வெல் படத்தின் டிரைலர் வீடியோவை தொடங்கி இருக்கிறார்கள். இந்த படத்தை நியோ டகோஸ்டா இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது தி மார்வெல் படத்தின் டிரைலர் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.