தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் தெலுங்கில் தசரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் தமிழில் மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்களை கையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, வடிவேலு புகைப்படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார் கீர்த்தி. ஒரு தொழில் அதிபருடன் கீர்த்தி காதலில் உள்ளார். கூடிய விரைவில் திருமணம் என அண்மையில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இந்த பதிலை கூறியிருக்கிறார்.