தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது தங்கலான் படத்தின் சூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.