தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. கடந்த 1979-ம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்களின் லிஸ்ட் பெரியது எனக் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு காரணம் அவருடைய டாக்டர் கணவர்தான். அந்த டாக்டர் அவரை போதை ஊசி போட்டு அடிமை ஆக்கினார். சில்க் ஸ்மிதா அவருடைய 21 வயது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருடன் அழைத்து சென்றதால் அதை டாக்டர் தவறாக நினைத்துக் கொண்டார். சில்க் ஸ்மிதா சினிமாவில் அறிமுகமானதில் எனக்கு 60 சதவீதம் பங்கு இருக்கிறது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது சில்க் ஸ்மிதா தான். சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திய ஹீரோக்களின் லிஸ்ட் அதிகம். 40 படத்தில் நடித்து கதாநாயகிகள் சம்பாதிப்பதை 4 படத்தில் நடனம் ஆடுவதன் மூலம் சில்க் சம்பாதித்து விடுவார் என்று கூறியுள்ளார்.