ரிசப் செட்டி அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இத்திரைப்படம் சாதனை படைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியாகி மொத்தம் 400 கோடி வசூல் சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து காந்தாரா திரைப்படம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிலும் ஏராளமான ரசிகர்கள் பார்த்ததை தொடர்ந்து தற்போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு காந்தாரா திரைப்படம் வெளியாகியுள்ளது.