விஷால் நடிப்பில் சென்ற 2018 ஆம் வருடம் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2019 ஆம் வருடம் ஹீரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதன்பின் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய சர்தார் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

இந்த திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது காதலி ஆஷா மீரா ஐயப்பனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தயாரிப்பு நிறுவனமான க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது.