தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை கண்காணிப்பதற்காக பொறுப்பு அலுவலர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் கார்கல்  உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, பொது தேர்வு கண்காணிப்பு பணிகளுக்காக மாவட்ட வாரியாக 38 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர் கான் நந்தகுமார் சென்னை மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்குனர் க.இளம் பகவத் மதுரைக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் பி.சி ராமேஸ்வர முருகன் திருவள்ளுவருக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீ வெங்கடப்பிரியா செங்கல்பட்டிற்கும், தமிழக பாடநூல் கழகத்தின் செயலர் ச.கண்ணப்பன் காஞ்சிபுரத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மு பழனிசாமி ராணிப்பேட்டைக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி திருச்சிக்கும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பூ.ஆ.நரேஷ் கரூர் மாவட்டத்திற்கும் என 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.