பிரபாஸ், அமிதாப் பச்சனுடன் இணைந்து “Project K” என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். Project K படத்தில் கமல்ஹாசன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு 400 கோடி செலவில் உருவாகும் பிரமாண்ட “புராஜெக்ட் கே” படத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் “புராஜெக்ட் கே” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.