உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாமன்னன் படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்..